மலசலகூட வசதியினை பெற கடிதங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான  கபில நுவன் அதுகோரள அவர்களின் தலைமையில் , தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நேற்று (17) மலசல கூட  வசதி இல்லாத 88 குடும்பங்களுக்கு  மலசலகூட வசதியை அமைப்பதற்கான அனுமதி கடிதங்கள் வழங்கப்பட்டன. 

நீண்டகால தேவையாக இருக்கும் மலசலகூட  வசதிகளை வழங்க தற்போதைய அரசு உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இப்பகுதியின் அபிவிருத்திக்கு தேவையான திட்டங்கள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

 அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்திற்கான அபிவிருத்தி திட்டங்களை எந்தவித பாகுபாடும் இன்றி மேற்கொண்டு வருவதாகவும், மாவட்டத்தின் மேம்பாட்டிற்காக ஏற்கனவே ஏராளமான நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன் போது தெரிவித்தார்.

இதில் சுமார் 40 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பும் ஐந்துக்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு பெறுவதற்கான அனுமதி கடிதங்களும் வழங்கப்பட்டன . 
குறித்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் கே.பரமேஸ்வரன், தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி,உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட பயனாளிகள் சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

[embedded content]

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Leave a Reply