யாழ். வருகிறார் பிரதமர் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜூலை 31ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய, 100 நகரங்களை நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தின் சில பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்காக வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம், நாவற்குழி, நெல்லியடி, மருதனார்மடம் ஆகிய 6 பிரதேசங்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதில் முதற்கட்டமாக வேலணை, கொடிகாமம், நாவற்குழி, மருதனார்மடம் ஆகிய 4 பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்கான திட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்றிட்டம் எதிர்வரும் 31ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் யாழ்ப்பாணத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

100 நகரங்களை நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்கு சுமார் 2000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு பிரதேசத்தை பல்பரிமாண நகராக்குவதற்கு முதற்கட்டமாக 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *