டெல்டா திரிபானது எதிர்வரும் நாட்களில் இலங்கையில் கொரோனா பரவல் நிலைமையை தீவிரமடைய செய்யும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்டா திரிபுடன் நாட்டின் பல பாகங்களிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையில், பயணக்கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது சிறந்ததல்ல எனவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
டெல்டா பரவல் நாட்டில் அதிகரித்தால் இதுவரை கொரோனா அலைகளால் ஏற்பட்ட பாதிப்புக்களை விட பல மடங்கு பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.