இலங்கையில் 10 ஆயிரத்தை அண்மிக்கும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை!

நாட்டில் மேலும் 145 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 951 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 59 ஆயிரத்து 456 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 3 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் 3 இலட்சத்து 82 ஆயிரத்து 476 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 67 ஆயிரத்து 32 பேர்  தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *