
இலங்கைக்கு இந்தியாவில் இருந்து மேலும் 150 தொன் ஒட்சிசன்!

கொவிட் – 19 நிலைமையினை கருதி இந்தியாவில் இருந்து மேலும் 150 தொன் ஒட்சிசன் இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
இலங்கைக்கான இந்தியாவின் LIFELINE திட்டத்தின் கீழ் தமிழ்நாடு விசாகப்பட்டினம் மற்றும் சென்னையில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்த்தானிகராலயம் பதிவிட்டுள்ளது.
ஜனாதிபதியின் தனிப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கடந்த மாதமும் சக்தி கப்பல் மூலம் 100 தொன் திரவ மருத்து ஒட்சிசன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.




