வவுனியாவில் நேற்றையதினம் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைந்தனர்.
குறித்த நபர்களில் ஒருவர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆயினும் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை மரணமடைந்தார்.
ஏனைய மூவரும் திடீர் சுகவீனமுற்ற நிலையில் அவர்களது வீடுகளில் மரணமடைந்தனர். அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதேவேளை வவுனியா பாவற்குளத்தினை சேர்ந்த 32 வயதான பெண்ணும் கொரோனா தொற்றினால் மரணமடைந்தார். ஏனையவர்கள் தேக்கவத்தை, மகாறம்பைக்குளம், சிறிநகர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.