இராணுவத்தின் உலர்ந்த மிளகாய் செய்கை வெற்றி!

அரசாங்கத்தின் “சௌபாக்ய தெக்ம” கொள்கைத் திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடை பணியகத்தினால் இராணுவ தளபதியின் நாட்டை செழிப்பூட்டுவதற்கான “துரு மித்துரு நவ ரட்டக்” நடுகை திட்டத்தை மையப்படுத்தி வவுனியா கந்தகாடு மெனிங் பண்ணை மற்றும் ஆண்டியபுலியன்குளம் இராணுவ பண்ணை உள்ளடக்கிய 200 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட உலர்ந்த மிளகாய் செய்கை வெற்றியளித்துள்ளது.

கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் அனுதிக்கப்பட்ட 79 மில்லியன் ரூபாய் நிதியை கொண்டு கடந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்ட மிளகாய் பயிர் செய்கை, பயிர் செய்கைக்கு தகுந்த வகையில் வரம்புகளை அமைத்தல் போன்ற திட்டங்கள் இலங்கை இராணுவத்தின் விவசாய மற்றும் கால்நடை பணியகத்துக்கு பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுரைக்கமைய ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

மேற்படி திட்டத்தின் கீழ் கடந்த செவ்வாய்க்கிழமை (13) முதல் அறுவடையின் அடையாளமாக கரும்பு, சோளம், மரமுந்திரிகை, மிளகு, கறுவா, கராம்பு, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை அபிவிருத்தி மற்றும் அது சார்ந்த கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சாணக்க வக்கும்புரவை ஆண்டியபுலியங்குளத்துக்கு அழைப்பித்து ஒரு கிலோவுக்கு 300 ரூபாய் என்ற அடிப்படையில் இலங்கை இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் அரோஸ் ராஜபக்‌ஷவினால் வழங்கி வைக்கப்பட்டது.

மதவாச்சி – மன்னார் வீதியில் ஆண்டியபுலியங்குளம் 50 ஏக்கர் விவசாய நிலத்தில் உற்பத்தி செய்யப்பட்ட உலர்ந்த மிளகாய் தொகை ‘சதொஸ’ மற்றும் கூட்டுறவு முகவர் நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

தற்போது, கந்தகாட்டில் (100 ஏக்கர்), மெனிங் பண்ணையில் (50 ஏக்கர்) மற்றும் ஆண்டியங்குளத்தில் (50 ஏக்கர்) நிலப்பரப்புக்களில் காணப்படும் விவசாய நிலங்களில் மேற்கொள்ளப்பட்ட மிளகாய் செய்கைகளிலிருந்து கிடைக்கும் மிளகாய்களை சேகரிக்கும் பணிகளை இராணுவ விவசாய மற்றும் கால்நடை பணிப்பகம் ஆரம்பிக்கவுள்ளது.

மேற்படி உற்பத்திகளை கொள்வனவு செய்யும் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர், அமைச்சரின் பிரதிநிதிள், விவசாய மற்றும் கால்நடை பணிப்பகத்தின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply