அடுத்த வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் வியாழேந்திரன் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் 2022 ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டமானது ஒவ்வொரு தனிப்பட்ட குடும்பத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலேயே அமையப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் ஐந்தாயிரம் கிராமிய பாலங்களை அமைக்கும் “இதயங்களை ஒன்றிணைக்கும் ஊரின் பாலம்” வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பட்டிப்பளை அம்பிளாந்துறை பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

மேலும் இதில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *