சர்ச்சைக்குரிய பராக்கிரம சமுத்திர நடைபாதை அமைக்கும் திட்டம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது பராக்கிரம சமுத்திர நடைபாதை அமைக்கும் திட்டத்தை இடைநிறுத்தம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என தெகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இது 34 மில்லியன் ரூபா செலவில் இந்த நடைபாதை அமைக்க தீர்மானிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நடைபாதை அமைப்பதற்காக பராக்கிரம சமுத்திரத்திற்குள் தள்ளப்பட்ட பாறைகள் மீண்டும் இழுக்கப்படுமென்று நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிஹால் சிறிவர்தன தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள பௌத்த மதத் தலைவர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து இந்தத் திட்டம் ஓகஸ்ட் 27 ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.





