வெடுக்குநாறிமலை ஆலய பூசாரி உள்ளிட்ட மூவர் நீதிமன்றில் முன்னிலை!

வவுனியா, நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தின் பூசாரி உள்ளிட்ட மூவர் இன்று (16) வவுனியா நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

ஆலயத்தின் பூசாரியான அ.மதிமுகராசா மற்றும் ஆலயத்தின் முன்னாள் நிர்வாகிகளாகச் செயற்பட்டு வந்த து.தமிழ்ச்செல்வன், செ.சசிகுமார் ஆகிய மூவரையும் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, குறித்த மூவரும் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

இதேவேளை, ஆலயத்தின் முன்னாள் செயலாளரான து.தமிழ்ச்செல்வன் கடந்த இரண்டு வருடங்களாக வெளிநாடொன்றில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply