மதுபோதையில் தனது 6 வயது மகனை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய தந்தை ஒருவர் புத்தல காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் நீண்ட நாட்களாக சந்தேக நபர் மதுபோதையில் வந்து அவரது மகனை தாக்குவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமையவே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு கைது செய்யப்பட்டவர் புத்தல – உடுகம பகுதியை சேர்ந்தவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.