வீடு ஒன்றில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் 13.9 மில்லியன் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்னிபிட்டிய பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்தே இந்த மில்லியன் கணக்கான பணம் மீட்கப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
மேலும் இதில், டுபாயில் உள்ளதாக கூறப்படும் போதைப்பொருள் வர்த்தகரான சரித் சந்தகெலும் எனும் ரன்மல்லி என்பவரின் உறவு முறை சகோதரரே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
ரன்மல்லி என்பவரின் மனைவியின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்தோடு கைது செய்யப்பட்ட நபர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 13.9 மில்லியன் ரூபா பணத்தை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.