பைஸர் தடுப்பூசியின் 70 ஆயிரத்து 200 டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
குறித்த தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
ஏற்கனவே 52 ஆயிரம் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.