ஜனாதிபதியிடம் சஜித் விடுத்துள்ள கோரிக்கை

பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உத்தேச சட்டமூலம் நாட்டின் இலவச கல்வி கட்டமைப்புக்கும் அதன் இருப்புக்கும் பேரழிவை ஏற்படுத்தும்.

எனவே, உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை உடனடியாக மீள பெற வேண்டும்.

அரசாங்கம் தான்றோன்றித்தனமாக பல்கலைக்கழகச் சட்டத்தை திருத்தி அல்லது உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கு முயற்சித்தால் மகா சங்கத்தினர் பல்கலைக்கழக சமூகம், சிவில் அமைப்புகள், ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை ஒன்றுதிரட்டி அந்த முயற்சியை தோற்கடிப்பதற்கு திடசங்கற்பத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி செயற்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Leave a Reply