யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!

வடமராட்சி, குடத்தனை கிழக்கு பகுதியில் இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு பத்து மணியளவில் வேலைமுடித்து வீட்டிற்க்கு வந்த நிலையில் உணவருந்தியபின் தூங்கிக் கொண்டிருந்த 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கதிரிப்பாய் அச்சுவேலியை சேர்ந்த அ.கபாஸ்கர் என்ற இளைஞனே மாமரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

Advertisement

அச்சுவேலி கதிரிப்பாயிலிருந்து வந்து தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்த நிலையிலேயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்,

இது தொடர்பான விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார், திடீர் மரண விசாரணை அதிகாரி ஆகியோர் மேற்கொண்டுவருகின்றனர்.

சடலம் கொரோணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனை மேற்கொண்டு உறவினரிடம் ஒப்படைப்பதற்க்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது.

Leave a Reply