முஸ்லிம்கள் மட்டுமா இந்த நாட்டில் பிரச்சினை-ஞானசாரரை திட்டும் தேரர்!

கலகொட அத்தே ஞானசார உனக்கு நான் சொல்கின்றேன், உன்னிடம் எந்த தேச பற்றும் இல்லை. உனக்கு விளங்குவது முஸ்லிம் பிரச்சினைகள் மட்டுமே. முஸ்லிம்கள் மட்டுமா இந்த நாட்டில் பிரச்சினை? பலம் இருந்தால் பேசு என ராஜாங்கனையே சத்தாரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி,பிரதமர் உட்பட இந்த நாட்டில் அனைத்து அரசியல்வாதிகளும் பெரிய கொள்கலன்களில் போதைபொருட்களை கொண்டு வந்து இந்த நாட்டில் இளைஞர்களுக்கு கொடுக்கின்றார்கள்.

நாட்டில் ஒவ்வொரு இடத்திலும் போதை பொருள். இன்று ஒரு காடு இல்லை, அனைத்து காடுகளையும் வெட்டி அழிக்கின்றார்கள். இந்த சிங்கள, பௌத்த அரசாங்கத்தில் மதுபானசாலைகள், சாராயக்கடைகளுக்கு பொறுப்பாக இந்த ஜொன்ஸ்டன் போன்ற நபர்கள் இருக்கின்றார்கள்.

என்னை கொன்று போட்டாலும் நான் பயப்படாமல் சொல்ல வேண்டியதை சொல்லுவேன் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நீ ஒரு பெரிய சிங்கம் என்று நினைத்துக்கொண்டிருந்தால் நான் உனக்கு சவால் விடுகின்றேன். இந்த கஷ்டத்தில் வாழும் ஏழை மக்களை பற்றி பேசு. இன்று மக்களுக்கு உண்ண உணவில்லாமல் இறந்து விழுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில்,

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *