டெவொன் நீர்வீழ்ச்சியில் காலிடறி விழுந்த யுவதி; மீட்புப் பணி தொடர்கிறது

டெவொன் நீர்வீழ்ச்சியில் காலிடறி விழுந்த யுவதி; மீட்புப் பணி தொடர்கிறது
திம்புள்ளை- பத்தனை, டெவொன் நீர்வீழ்ச்சியில் காலிடறி விழுந்து யுவதி ஒருவர் காணாமல் போயுள்ளார் என்று, திம்புள்ளை-பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளன்ர.
தலவாக்கலை லிந்துலை பிரதேசத்தைச் சேர்ந்த பவித்ரா (வயது 19) என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த யுவதி தனது நண்பிகளுடன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்றுள்ளார் என்றும் அவர்கள் நால்வரும் நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு சென்றுள்ள நிலையில் நீர்வீழ்ச்சியில் கால்நனைப்பதற்கு முயற்சித்த போதே யுவதி காலிடறி கீழே விழுந்துள்ளார் என்றும் தெரியவருகிறது.

டெவோன் நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதி ஒரு பாறை நிறைந்த பகுதி என்றும், இந்த நாட்களில் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் மிக அதிகமாக உள்ளது என்றும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

திம்புள்ளை – பத்தனை பொலிஸார், இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், பிரதேச மக்கள் இணைந்து யுவதியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பில் திம்புள்ளை – பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *