மட்டு ஏறாவூரில் 90 கிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது

மட்டு ஏறாவூரில் 90 கிராம் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது 

(கனகராசா சரவணன்;)

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய் பகுதியில் மோட்டர் சைக்கிளில் வியாபாரத்துக்கா கஞ்சாவை எடுத்துச் சென்ற 24 வயதுடைய இளைஞர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (5) மாலையில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதுடன் அவரிடமிருந்து 90 கிராம் கேரளா கஞ்;சா மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டு ஒப்படைத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

கடற்படை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கமைய களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினர் சம்பவதினமான நேற்று மாலை 6.30 மணிக்கு குறித்த பகுதியில் உள்ள பாடசாலைக்கு அருகில் வீதியில் வைத்து மோட்டர்சைக்கிளில் கஞ்சாவை வியாபாரத்துக்கு எடுத்து சென்ற இளைஞனை மடக்கிபிடித்தனர் 

இதன்போது அவரிடமிருந்து 90 கிராம் கேரளா கஞ்சாவும் இந்த சட்டவிரோத செயற்பாட்டிற்கு பயன்படுத்திய மோட்டர்சைக்கிள் ஒன்றை மீட்டனர். இதில் கைது செய்யப்பட்டவர் ஜயங்கேணி செங்கலடி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனையும் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளர் 

இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.;       

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *