பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நமது சூழலில் காணப்படுகின்ற கொரோனா வைரஸை அழிக்கக்கூடிய இரண்டு இயந்திரங்களை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளார்.
பிலியந்தலை தேவானந்தா சாலையைச் சேர்ந்த மின்னியல் வல்லுநர் (electrician) புத்திக பெரேரா என்பவரே இந்த இரண்டு இயந்திரங்களை வடிவமைத்துள்ளார்.
தனது பள்ளிப் பருவத்திலிருந்தே தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி வரும் இந்த இளைஞர், இப்போது கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள கூடியதாகவும் , ஆரோக்கியத்திற்கு உகந்ததாகவும், சுற்றுச்சூழலுக்கு பொருத்தமான வடிவமைப்புகளை உருவாக்க முடிவு செய்துள்ளார்.
குறித்த இளைஞன், காற்றின் மூலம் பரவக்கூடிய வைரசை அழிக்கும் தானியங்கி இயந்திரம் ஒன்றையே கண்டுபிடித்துள்ளார்.
அதன்படி, பணத் தாள்கள் மற்றும் ஆவணங்களில் உள்ள வைரஸ், பக்டீரியாக்களைக் சில நொடிகளில் கொல்லும் தானியங்கி கிருமி நீக்கம் செய்யும் கருவி ஆகியவை அவற்றுள் அடங்கும்.
மேலும், பொரெல்லா, சுசமவர்தன மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை படித்த நிலையில், கொழும்பு பகுதியில் உள்ள முன்னணி நிறுவனத்தில் மோட்டார் பொறியியல் படித்து அது தொடர்பான மேலதிக கல்வியை தொடர ஜப்பான் சென்றதோடு, மலேசியாவில் இயந்திரப் பயிற்சி வகுப்பையும் எடுத்துள்ளார்.
இதவேளை, கொரோனா வைரஸ் நம் நாட்டிற்கு பரவியதால், வைரஸை தோற்கடிக்கும் ஒரு சாதனத்தை உருவாக்க தனது அறிவையும் தொழில் அனுபவத்தையும் பயன்படுத்தியுள்ளார் எனவும் குறித்த இளைஞன் மேலும் தெரிவித்தார்.