புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான 2ம் அலகு கொவிட் -19 (Pfizer) தடுப்பூசி இன்று ஏற்றப்பட்டது.
புத்தளம் சுகாதார பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.
குறித்த தடுப்பூசி ஏற்றும் பணி புத்தளம் சாஹிரா தேசியப் பாடசாலை மற்றும் புத்தளம் சிறாம்பையடி விகாரை ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
ஊரடங்கு நேரத்திலும் அதிகளவிலான மக்கள் இரண்டாம் அலகு கொவிட் 19 (Pfizer) தடுப்பூசியைப் பெருவதற்காக நீண்ட வரிசையில் நின்றதை அவதானிக்க முடிந்தது.
புத்தளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட 30 வயதுக்கு மேற்பட்ட 39000 பேருக்கு கொவிட் தடுப்பூசி முதலாம் அலகு ஏற்றப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.


