முள்ளிவாய்க்காலை சேர்ந்த பெண் இராமேஸ்வரத்தில் கைது

சட்டவிரோதமாக இலங்கை வர முயன்ற பெண் ஒருவர் இராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் சட்டவிரோதமாக படகு மூலம் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு பயணிக்க முயன்றபோது, கடலோர காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை – வேளச்சேரியில் தங்கியிருந்த குறித்த பெண் முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கை பெண் இராமேஸ்வரம் கரையோர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *