இளையோரின் கல்வி, கலை, ஞானம் நல்வாழ்வு நல்லொழுக்கம், பக்தி, பண்பாட்டு விழுமியங்களை கட்டிக்காத்து வளர்த்திட பணியாற்றும் கல்வித் தெய்வம் உறையும் சரஸ்வதி அம்பாள் உபதேச திருக்கோவில் குருகுலம் நடத்தும் மாபெரும் இசை வேள்வி போட்டியில் கலந்து கொள்ளுமாறு சிவஸ்ரீ.சபா.வாசுதேவக்குருக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் காலத்தில் பொழுதினை பயனுள்ளதாகவும் நல்லதாகவும் அமைந்திட, உலகெங்கும் பரந்து வாழும் சைவத்தமிழ் இளையோரை போட்டியில் கலந்து கொண்டு பயனடையுமாறு அன்பும் நல்லாசியும் தந்து குருமுதல்வர் சிவஸ்ரீ.சபா.வாசுதேவக்குருக்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
