மாணிக்கக்கல் தொழிலில் முன்னணி நிறுவனமான கஹவத்த குருகேமெனிக்
நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜினதாஸ குருகே காலமானார்.
அவர் தனது 86 வது வயதில் இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ஜினதாஸ குருகேவினால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட குருகேமெனிக் நிறுவனம் பலதசாப்த காலங்களாக வெற்றிநடை போடுகிறது.
இதேவேளை,இவருடைய இறுதிச் சடங்கு நாளை இடம்பெறவுள்ளது.