இராணுவத்தினரால் அனைத்து விடயங்களையும் திறன்பட செயற்படுத்த முடியாது.நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையை பெற வேண்டும் என முருந்தொட்டுவ ஆனந்த தேரர் தெரிவித்தார்.
அபாயராம விகாரையில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளும் போது மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொள்கிறார்கள். சதொச விற்பனை நிலையத்தின் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
இந்நிலை தொடர்ந்தால் ‘சீனி கொவிட் கொத்தணி’ தோற்றம் பெறும் என தெரிவித்தார்.இராணுவத்தினரால் அனைத்து விடயங்களையும் திறன்பட செயற்படுத்த முடியாது. நாடு தற்போது எதிர்க் கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையை பெற வேண்டும்.
சிறந்த தரப்பினரை உள்ளடக்கிய ஆலோசனை சபையை ஜனாதிபதி ஸ்தாபிக்க வேண்டும். கொவிட் தாக்கத்தின் காரணமாக சுபீட்சமான கொள்கை திட்டத்தை ஜனாதிபதியால் செயற்படுத்த முடியாமல்போயுள்ளது. இனி வரும் காலங்களிலாவது சுபீட்சமான கொள்கை திட்டத்தை செயற்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி சிறந்த ஆலோசனைகளை பெற வேண்டும் என்றார்.