மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப் பிரிவுக்குற்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் தலைமைகப் பிரிவுக்குட்பட்ட நல்லையா வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்தே இந்த சடலம் இன்று திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வீட்டில் ஒரு அறையில் தங்கியிருந்த செல்வரெட்னம் குலேந்திரன் என்னும் 73 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும் குறித்த நபர் மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்தில் கணக்காளராக கடமையாற்றி வருவதாகவும் ஊரடங்கு காரணமாக தொழிலுக்கு செல்லா நிலையில் வீட்டில் இருந்து வந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நோய்வாய்ப்பட்டு மருத்துவ சிகிச்சையும் பெற்றுவந்த நிலையிலேயே கட்டிலில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமைய பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மேலும் திடீர் மரண விசாரணை அதிகாரி ஜீவரெட்னம் குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை பிரேத பரிசோதனைகளுக்கா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பணிப்புரை விடுத்தார்.
அத்தோடு இச் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.