யாழ்ப்பாணத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனையிலுள்ள தனியார் காணிகளில் இதுவரை மீளக்குடியமராத குடும்பங்களின் விபரங்களையும்,பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்புக்குள்ளான காணி உரிமையாளர்களின் விபரங்களையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.
மேலும் குறித்த நடைமுறைகளுக்காக மக்கள் விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி 15.09.2021 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மேலதிக விபரங்களுக்காக யாழ் மாவட்ட செயலக www.jaffna.dist.gov.lk எனும் இணையத்தளத்தையும் பார்வையிடமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.