அராலி மத்தி பகுதியில், கடலில் மீன் பிடிப்பதற்காக விடப்பட்டிருந்த விலைகள் நேற்று இரவு (05) திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சுமார் 20 விலைகள் இவ்வாறு களவாடப்பட்டு உள்ளன. இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.