இலங்கையில் நேற்று 180 மரணங்கள் பதிவு; இதுவரை 10 ஆயிரத்து 320 உயிரிழப்புகள்

இலங்கையில் நேற்று 180 மரணங்கள் பதிவு; இதுவரை 10 ஆயிரத்து 320 உயிரிழப்புகள்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 180 மரணங்கள் நேற்று (05) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 10,140 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 180 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 10,320 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.

இவ்வாறு மரணமடைந்த 180 பேரில், 97 பேர் ஆண்கள், 83 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 133 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *