
நாளை (7) கல்முனை பிராந்தியத்திலுள்ள 13 MOH பிரிவுகளிலும் தடுப்பூசி செலுத்தப்படும்

கல்முனை பிராந்தியத்திலுள்ள அனைத்து சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் நாளை (07) செவ்வாய்க்கிழமை முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஆரம்பமாகும் என பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
அடுத்த தொகுதியாக மேலும் 50 ஆயிரம் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன ஏற்கனவே தடுப்பூசி செலுத்த தவறியவர்களுக்கான, 1வது, 2வது டோஸ் செலுத்தப்படும். செல்லும் போது தடுப்பூசி அட்டையை எடுத்து செல்லவும்.