ஹட்டனில் இரண்டாம் கட்ட தடுப்பூசி

நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் ஹட்டனில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி 07.09.2021 இன்று வழங்கப்பட்டது.

ஜூலை 31ம் திகதி ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும், ஆகஸ்ட் 02ம் திகதி ஹட்டன் D.K.W. மண்டபத்தில் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு டி.கே.டபிள்யூ மண்டபத்திலும் வழங்கப்பட்டது. மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *