யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி பதவியேற்பு

யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, பலாலி இராணுவக் கட்டளை தலைமையகத்தில் வைத்து, இன்று (19) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, கொழும்பு இராணுவ தலைமையகத்துக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில், கொழும்பு இராணுவக் கட்டளை தலைமையகத்தில் கடமையாற்றிய மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, யாழ்ப்பாணம் மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *