தடுப்பூசிகள் கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என சில பகுதிகளில் மதத்தலைவர்கள் போதிக்கின்றனர்.பொதுமக்கள் ஒரு குறிப்பிட்ட தடுப்பூசியை மாத்திரம் செலுத்திக்கொள்ளும் நோக்கத்த்தை தவிர்த்துவிட்டு கிடைக்கின்ற எந்த தடுப்பூசியையும் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களிற்காக தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாமல் இருக்கும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை தவிர ஏனைய 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் வெளியாகியுள்ளது.இன்னமும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளாத 30 மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களை தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன்வருமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்தோடு தடுப்பூசிக்கெதிரான அமைப்புகள்நாட்டில் உருவாவது குறித்த அச்சத்தின் மத்தியிலேயே சுகாதார அதிகாரிகள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.சில மதத்தலைவர்களின் போதனைகள் புராதன எண்ணங்கள் தவறான எண்ணங்கள் காரணமாக தடுப்பூசிக்கு எதிரான உணர்வுகள் தோற்றம் பெற்றுள்ளன.கொவிட் தடுப்பூசிகள் கருவுறுதல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என சில பகுதிகளில் மதத்தலைவர்கள் போதிக்கின்றனர்,மருத்துவநிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இத் தடுப்பூசிகள் பாதிப்புகளை ஏற்படுத்துமென சிலர் உறுதியாக நம்புகின்றனர்.இதன் காரணமாக 30வயதிற்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னமும் தடுப்பூசியை செலுத்திக்கொள்வில்லை,டெல்டாவின் புதிய மாறுபாடுகள் குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ள சூழலிலும், மேல்மாகணத்திற்கு வெளியே டெல்டா பரவும் நிலையிலும் சுகாதார தரப்பினர் மத்தியில் இது குறித்து கரிசனை உருவாகியுள்ளது.
மேலும் 60வயதிற்கு மேற்பட்டவர்களில் இன்னமும் 225000 பேர் இன்னமும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவில்லை என சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.குறிப்பிட்ட வயதினை சேர்ந்த அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மருத்துவர்கள் மதத்தலைவர்கள் சிலர் போதிக்கும் பிழையான விடயங்களை நம்பவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்தோடு தடுப்பூசி மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும்,தவறான கருத்துக்களின் பிடியிலிருந்து விடுபடுவது கடினம் எனினும் இதில் உண்மையில்லை,பொதுமக்கள் இந்த தவறான தகவல்களிற்கு பலியாகாமல் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளவேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.