இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மீது கிலோவுக்கு ரூ .40 என்ற விஷேட வரி விதிக்க அரசு முடிவு செய்துள்ளது.
நேற்று திங்கட்கிழமை (06) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
அதன்படி,தேசிய உற்பத்தி பெரிய வெங்காயம் சந்தைக்கு வந்துள்ளதால் உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
தம்புள்ளை மற்றும் பிற பகுதிகளில் பெரிய வெங்காயம் அறுவடை செய்யப்படுவதால் இலங்கை விவசாயிகளைப் பாதுகாக்க அதிக வரியை விதிக்குமாறு அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் சமீபத்தில் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.