வடமாகாண தொற்று நோயியல் நிபுனர் வெளியிட்டுள்ள விசேட தகவல்

ஆபத்து கூடிய 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தொற்றா நோய்கள் உடையவர்களிடத்தில் இந்த தடுப்பூசி அடைவு மட்டத்தை கண்டால் மாத்திரமே இறப்பை உடனடியாக குறைக்கக்கூடியதாக இருக்கும் என வடமாகாண தொற்று நோயியல் நிபுனர் சிவகணேஸ் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாணத்தை பொறுத்தவரையில் ஆரம்ப காலங்களில் கொரோனா நோயானது கட்டுப்பாட்டுக்குள் காணப்பட்ட பொழுதும், அண்மைய இரண்டு மாதங்களில் நோய்த்தாக்கம் மிக அதிகமாக காணப்படுகின்றது. அதிலும் நோயாளர் எண்ணிப்பு அதிகரித்துள்ளதுடன், இறப்புக்களும் அதிகரித்துள்ளது.

நாங்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பொழுதும், பொதுமக்களின் சில நடவடிக்கைகள் காரணமாக தடுப்பு நடவடிக்கைகளின் இயலுமை குறைவாக உள்ளது. அதனால் எங்களிற்கு எதிர்பார்த்ததைவிட இறப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

ஆரம்பகட்ட தகவல்களை ஆராய்ந்தபொழுது, இறப்புக்கள் அதிகளவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடத்திலும், அதேநேரம் பல்வேறு தொற்றா நோய்கள் முன்னரே காணப்பட்டவர்களிடத்திலும் இறப்புகள் அதிகளவில் ஏற்படுகின்றது.

அதேவேளை தடுப்பூசி ஏற்றும்பொழுது 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மத்தியில் குறைவாகவே காணப்படுகின்றது. உலகளாவிய ரீதியில் ஆரம்ப கால கட்டங்களில் 70 வீதமான மக்களிற்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும்பொழுது பாதுகாப்பு தன்மை அதிகம் என திர்பார்க்கப்பட்டபோதிலும், தற்பொழுது புதிய டெல்டா திரிவுகள் போன்ற திரிவுகள் காணப்படுகின்ற காரணத்தினால் அந்த எதிர்பார்க்கும் அடைவுமட்டம் அதிகமாக காணப்பட வேண்டும்.

அதிலும் ஆபத்து கூடிய 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் தொற்றா நோய்கள் உடையவர்களிடத்தில் இந்த தடுப்பூசி அடைவு மட்டத்தை கண்டால் மாத்திரமே இறப்பை உடனடியாக குறைக்கக்கூடியதாக இருக்கும். அதேவேளை எமது உடலின் பொதுவான பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

ஏனெனில் எமது உடலின் பொதுவான பாதுகாப்பு அதிகரிக்கப்படும் பட்சத்தில்தான் புதிய புதிய திரிவுகள் குறைக்கப்பட்டு அதிலிருந்து ஏற்படும் பாதிப்புக்களிலிருந்து பாதுகாக்கக்கூடியதாக இருக்கும். எனவே அதற்கு நாங்கள் புாதிய அளவு ஆரோக்கியமான உணவுகளை உண்ண வே்ணடும்.

புரதச்சத்து, பல்வேறு கனியுப்புக்கள், பல்வேறு உயிர்ச்சத்துக்கள் உள்ள உணவு வகைகளை உண்ண வே்ணடும். புரத சத்துக்கள் என குறிப்பிடும்பொழுது மீன், முட்டை, கடலை வகைகள், பயறு, அவரை வகை உணவுகள், அதேபோன்று மருந்து தெளிக்கப்படாத கீரை வகைகள், பல்வேறு வகையான பழங்களையும் உண்ண வேண்டும்.

பனம்பழம் கூட எமது பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை கொண்டது. நாங்கள் அதனை போதிய அளவு உட்கொள்வது குறைவு. அதேபோல் இந்த காலப்பகுதியில் விளைகின்ற நெல்லிக்காய் மற்றம் பச்சையாய் உண்ணக்கூடிய மரக்கறிகள் போன்றவற்றை போதிய அளவு உள்ளெடுக்க வேண்டும்.

அதேவேளை, போதிய அளவு நீர் ஆகாரமும் உட்கொள்ள வே்ணடும். சோடா தவிர்ந்த ஏனைய நீர் ஆகாரங்களை உட்கொள்வதன் ஊடாக இந்த தொற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்.

இதேவேளை எமது அரசாங்கமும், உலக சுகாதார நிறுவனமும் அறிவுறுத்தியதன் பிரகாரம், போதிய அளவு ஆள் இடைவெளியை பேணுதல், முக கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி கழுவுதல் மூலமும் இவற்றை நாங்கள் பாதுகாத்துக்கொள்ளலாம்.

தறபொழு அரசாங்கம் முடக்கத்தை அறிவித்தாலும் எமது மக்கள் ஆரம்ப கால நினைவுகளை மையமாக வைத்து உள்ளுருக்குள் நடமாடுவது அதிகமாக உள்ளது. அதிலும் இந்த முடக்க காலத்திலும் நிகழ்வுகளை வீடுகளில் செய்வது அவர்களின் வீரதீர செயல்போல கருதுவது கோல் தெரிகின்றது.

இயலுமானவரை அவ்வாறான விடயங்களை பிற்போட வேண்டும் எனவும் அவர் இன்றைய ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *