
எம்பலப்பிட்டியில் இருந்து அம்பாறை நிந்தவூருக்கு அத்தியவசிய சேவைகள் என்ற பெயர் பலகையுடன் லொறி ஒன்றில் 350 மூடை யூரிய உரத்தை கடத்திய இருவர் கைது
(கனகராசா சரவணன்)
எம்பலப்பிட்டியில் இருந்து அம்பாறை நிந்தவூர் பிரதேசத்திற்கு லொறி ஒன்றில் அத்தியவசிய சேவைகள் என்ற பெயர் பலகை இடப்பட்டு 350 உரைப்பை மூடைகள் கொண்ட யூரிய உரத்தை கடத்திகொண்டு சென்ற இருவரை நிந்தவூர் பிரதேசத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (07) மாலை 5 மணிக்கு அம்பாறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசார் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்.
அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் மா அதிபர் செனவரெத்தினவின் ஆலோசனைக்கமைய மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவுடன் இனைந்து மாவட்ட விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து சம்பவதினமான இன்று மாலை 5 மணியளவில் நிந்தவூர் பகுதி வீதியில்; கண்காணிப்பில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த நிலையில் குறித்த பகுதிக்கு எம்பலப்பிட்டியில் இருந்து வந்த லொறியை மடக்கிப்பிடித்து சோதனையிட்டபோது அதில் சட்டவிரோதமாக தலா 50 கிலோ கிராம் கொண்ட 350 உரப்பை மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து லொறி சாரதி மற்றும் கண்டக்டர் உட்பட இருவரை கைது செய்ததுடன் 350 உரப்பை மூடைகளையும் லொறி ஒன்றையும் மீட்டனர்
இவ்வாறு மீட்டகப்பட் யூரியா மூடைகள் லொறி மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும் சம்மாந்துறை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டுவருவதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் .