பிரித்தானியா சுகாதார செயலாளருக்கு கொரோனா தொற்று: பிரதமரும் தனிமைப்படுத்திக்கொண்டார்!

பிரித்தானியா சுகாதார செயலாளர் சஜித் ஜாவிட், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

லேசான அறிகுறிகளுடன் தொற்று பாதித்துள்ள அவர், தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் இல்லத்திற்கு ஜாவிட், சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும், பிரதமர் பொரிஸ் ஜோன்ஸனை நேரடியாக ஜாவிட், சந்தித்தாரா என்பது பற்றி அவரது செய்தி தொடர்பாளர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

இதனிடையே பிரதமர் பொரிஸ் எதிர்வரும் 26ஆம் திகதி வரை தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், செயலாளர் சஜித் ஜாவிட், கொரோனா தடுப்பூசியின் இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply