திருகோணமலை ,தம்பலகாமம் பொலிஸ் பிரிவில், முள்ளிப்பொத்தானையில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் தற்கொலை செய்து, கொண்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று (08) புதன் கிழமை அதிகாலை இடம் பெற்றதாக தம்பலகமம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம் முள்ளிப் பொத்தானை சதாம் நகரைச் சேர்ந்த அலிபுல்லா – அர்ஷான் வயது (22) உடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவருடைய. தற்கெலைக்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணையை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.