பலாங்கொடை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வளர்க்கப்பட்ட நாயினை திருடி ரூ. 7,500 க்கு அடகு வைத்த இருவர் நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்கள் பலாங்கொடை கிரிமெதிதென்ன பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது நாய் திருடப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் நேற்று பலாங்கொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.