கொழும்பில் உள்ள குறுந்துவத்த பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை மாலை ஒருவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்து கொண்டதாக குருந்துவத்த பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, தாக்குத் தானே தீயிட்டுக்கொண்ட நபரை குறித்த பகுதியில் உள்ள மக்கள் மீட்டெடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
தீ வைத்துக் கொண்ட நபர் தொடர்பான அடையாளத்தை வெளிப்படுத்த விசாரணை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, குறித்த நபரின் தற்கொலை சம்பவதிற்கான காரணங்கள் இன்னும் அறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.