தமிழீழ மக்களின் போராட்டத்தை ஆதரித்தவரும், தமிழீழ தேசியத்தலைவரை அதிகம் நேசித்தவரும் அ.தி.மு.க. முன்னாள் அவைத்தலைவராகவும் இருந்த, பாடலாசிரியர் புலமைப்பித்தன் ஐயா இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.
86 வயதுடைய புலமைப்பித்தன் ஐயாவுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை 09.33 மு.ப மணிக்கு உயிரிழந்தார்.
‘நான் யார்’ என்ற பாடல் வழியாக திரையுலகில் நுழைந்து, அடிமைப் பெண் படத்தில் எழுதிய ‘ஆயிரம் நிலவே வா’ பாடல் மூலம், அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’, ‘தெனாலிராமன்’ ஆகிய வரலாற்றுப் பின்னணிப் படங்களுக்கு இவர்தான் பாடல்களை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.