கொரோனா தொற்று அதிகரிப்பால் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முல்லைத்தீவு சதோச விற்பனை நிலையத்தில் அரசினால் நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையில் அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்காக வழங்கப்பட்டு வருகின்றன.
மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சதோச விற்பனை நிலையத்திற்கு சென்று அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
மேலும் தற்போது கொரோனா தொற்று அதிகரிப்பால் அத்தியவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்தன மக்களின் நலன் கருதி அரசினால் அத்தியாவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் சதோச விற்பனை நிலையங்களில் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது