யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் 53 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு பாவனை அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வுக்காக கடந்த மூன்று வாரங்களில் 45 வழக்குகள் உள்ளடங்கலாக நேற்று மாத்திரம் 08 வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
மேலும், இதுவரையில் மொத்தமாக 53 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மாகாணங்கள் மட்டத்தில் அமுலாக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு சட்டத்தின் காரணமாக அத்தியாவசியப் பொருட்கள்,மற்றும் இதர உணவுப் பண்டங்களை விற்பனை செய்யாது மறைத்துவைப்பது தொடர்பிலும், அதனை விற்பனை விலையினை அதிகரித்து செய்தல்,மற்றும் கலாவதியாக பொருட்களை விற்பனை செய்வது தொடர்பில் யாழ் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு பாவனை அதிகார சபையினால் சுற்றிவளைப்பு முன்னெக்கப்பட்டன.
அவற்றில் மூன்று வார காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் இருந்து 45 வழக்குகள் வழக்குதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை விட நேற்று மாத்திரம் 08 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் யாழ் நீதிமன்ற வழக்குகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.தாமதமாகவே வழக்குகள் இடம்பெறுகின்றது. மேலும் நுகர்வோர் பாவனைஅதிகாரசபை அலுவலக அதிகாரிகள், நிலுவைகள் அளவை உத்தியோகத்தர்கள் இணைந்த களப்பரிசோதனைகளும் முன்னெடுத்துவருவதாகவும் தெரிவித்தார்.
எனவே மக்களுக்கு ஏற்ப விலைவாசியின் அடிப்படையில் பொருட்களை விற்பனை செய்வதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொது முடக்கத்திலும் மக்கள் தமது கவனக்குறையின்றி சென்று வருவதையும் அவதானிக்கமுடிக்கின்றது. தங்களையும்,குடும்ப உறவுகளையும் பாதுக்கும் வண்ணம் பொதுமக்களை நடந்துகொள்ளும்படி விநயமாக கேட்டுக்கொள்ளுகின்றோம்.என தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு பாவனை அதிகாரசபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அத்தியாவசியப்பொருட்களின் அரசாங்கத்தின் விலை நிர்ணய அடிப்படையின்றி பொருட்களை அதிகவிலைநிர்ணய விற்பனையில் செய்தல் தொடர்பில் ஊடகங்களுகளுக்கு தெளிவுபடுத்தும் ஊடகசந்திப்பு இன்று யாழ் மாவட்டஅரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.
இதில் 18 வயது தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளை வழங்குவதற்காக யாழ் மாவட்டத்தில் இருந்து 14 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளின் ஊடாக 1,20000 மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி எற்றும் நடவடிக்கைக்காக வடமாகாண சுகாதார பிரிவினரிடம் கோவையினை அனுப்பிவைத்துயிருக்கின்றோம்.அந்த தடுப்பூசி கிடைத்தபின்னர் அவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்படும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.