பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் என்ற ரீதியில் எனக்கு எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. ஆனால் ஏனையோருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறதா என்பது தொடர்பில் எனக்கு தெரியாதென்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
மேலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பது மாத்திரமே சுகாதார தரப்பினரின் கடமையாகும்.
முலமு் அவற்றை மக்கள் பின்பற்றுகின்றனரா இல்லையா என்பதையும் சுகாதார தரப்பினரே கண்காணிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தால் அது தவறாகும்.
சுகாதார தரப்பினராக நாம் எமது கடமையை நிறைவேற்றுவதைப் போலவே , ஏனையோர் அவரவர் கடமையை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் குறிப்பிட்டார்.