அண்மையில் மாத்தறை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட மேடவத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு உயிரிழந்தவர் மாத்தறை, மேதவத்தையில் வசிக்கும் 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது
28 மற்றும் 34 வயதுடைய சந்தேக நபர்கள் மாத்தறை பிரதேசத்தில் வசிப்பவர்கள் மற்றும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும் இந்த கொலை தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.