வெட்டிய குளிக்குள் நபர் ஒருவர் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அநுராதபுரம் – திறப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் அடிப்படைத் தேவைக்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 61 வயது தொழிலாளர் ஒருவர் அதே அகழ்வு குளிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக திறப்பனை பொலிசார் குறிப்பிடுகின்றனர்.
மேலும் திறப்பனை எதுன்கம பகுதியைச் சேர்ந்த 61 வயது தொழிலாளர் ஒருவரே உயிரிழந்துள்ளவராவர்.
அத்தோடு குறித்த நபர் மற்றுமொரு குழுவினருடன் அகழ்வு கட்டுமானப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அகழ்வு குளிக்குள் சறுக்கி விழுந்துள்ளார்
மேலும் இதில் பலத்த காயத்திற்குள்ளான அவர் சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.