தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில், நேற்று முன்தினம் (17) இரவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதவர்களால் அடித்து நொருக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
முன்பகை ஒன்றின் காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றிருக்காலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







