சீல் வைக்கப்பட்ட 4,100 மெட்ரிக் தொன் சீனியினை கொண்ட களஞ்சியசாலையில் இருந்து 320 மெட்ரிக் தொன் சீனி சட்டவிரோதமாக சந்தைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.
சமீபத்தில் வத்தளை எந்தெரமுல்ல பகுதியில் உள்ள சீல் வைக்கப்பட்ட சீனி களஞ்சியசாலையிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
களஞ்சியசாலையில் இருந்து சீனியை எடுத்து செல்ல வந்த லொரியினையும் அங்கு சென்ற அதிகாரிகளால் அவதானிக்க முடிந்தது.
அதன்படி, அங்கு சென்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அதிகாரிகளால் சீனி கைப்பற்றப்பட்டு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.
மேலும், களஞ்சியசாலைக்கு பொறுப்பான இரண்டு அதிகாரிகள் உட்பட லொரியின் சாரதியும் கடவத்த போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வத்தளை மற்றும் பேலியகொட ஆகிய நான்கு களஞ்சியசாலைகளில் பதிவு செய்யப்பட்ட சீனியின் அளவை விட 4,036 மெட்ரிக்தொன் இந்த களஞ்சியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.