மன்னாரில் மேலும் 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பால் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட நிலையில், மன்னார் மாவட்டத்தில் புதிதாக 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை விடுத்துள்ள கொரோனா தொற்று நிலவர அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை புதிதாக 26 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 165கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மன்னார் மாவட்டத்தில் நேற்றையதினம் புதன்கிழமை மேலும்26 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வருடம் மன்னார் மாவட்டத்தில் 1832 தொற்றாளர்களும் தற்போது வரை மன்னார் மாவட்டத்தில் மொத்தமாக 1849தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 22 கொரோனா தொற்று மரணம் நிகழ்ந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *