நாட்டின் பாதுகாப்பு அம்சத்தில் காணப்படும் மிகச் சிறிய இடைவெளிகளின் மூலமாக ஊடுருவி வரும் ஈஸ்டர் தாக்குதல் போன்ற தீவிரவாத தாக்குதல்களை நடத்தும் அபாயத்தில் நாடானது உள்ளது என பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் சதி மற்றும் தீவிரவாத செல்வாக்கு குறித்து பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
இஸ்லாத்தின் பெயரால் அப்பாவி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தற்போது அரசியல் காற் பந்தாக மாறியுள்ளது. இதற்குள் உலக அரசியலும் ஊடுருவி வருகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் திட்டமிட்ட முறையில் நாட்டில் உறுதியற்ற தன்மையை உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் மதத் தலைவர்கள் உட்பட சில சக்திகள் தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சமயத்தின் பெயரால் ஏற்படும் தீவிரவாத செயல்பாட்டைத் தடுக்க தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது குறுகிய கால தீர்வாக அமையும்.
மேலும் , நாட்டில் தீவிரவாத சித்தாந் கருத்துக்களை பரப்பும் தீவிரவாத அமைப்புகளை அடையாளம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்.
இவ்வாறு தீவிரவாத அமைப்புக்களை தடை செய்து ஒரு பாதுகாப்பான நாட்டை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.