வடக்கு மாசிடோனியாவின் டெட்டோவோவில் உள்ள கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வரும் வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தீவிபத்தில் பல நோயாளிகள் பலத்த காயமடைந்துள்ளனர்.
மேலும் தீ விபத்திற்கான காரணங்கள் அறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தீ விபத்தில் இறப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தீ விபத்தின் போது வைத்தியசாலையில் இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் சுகாதார அமைச்சர் வென்கோ பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் இருந்து மீட்கப்பட்டவர்களுக்கு தற்காலிக வேறு மருத்துவமனை வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.